மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடுதூது சீர்கொண்ட கூடற் சிவராச தானிபுரந் தேர்கொண்ட சங்கத் திருந்தோரும் - போர்கொண் 1 டிசையுந் தமிழரசென் றேத்தெடுப்பத் திக்கு விசையஞ் செலுத்திய மின்னும் - நசையுறவே 2 செய்யசிவ ஞானத் திரளேட்டி லோரேடு கையி லெடுத்த கணபதியும் - மெய்யருளாற் 3 கூடல் புரந்தொருகாற் கூடற் புலவரெதிர் பாடலறி வித்த படைவேளும் - வீடகலா 4 மன்னுமூ வாண்டில் வடகலையுந் தென்கலையும் அன்னைமுலைப் பாலி னறிந்தோரும் - முன்னரே 5 மூன்றுவிழி யார்முன் முதலையுண்ட பிள்ளையைப்பின் ஈன்றுதரச் சொல்லி னிசைந்தோரும் - தோன்றயன்மால் 6 தேடிமுடி யாவடியைத் தேடாதே நல்லூரிற் பாடி முடியாய்ப் படைத்தோரும் - நாடிமுடி 7 மட்டோலைப் பூவனையார் வார்ந்தோலை சேரர்த்தெழுதிப் பட்டோலை கொள்ளப் பகர்ந்தோரும் - முட்டாதே 8 ஒல்காப் பெருந்தமிழ்மூன் றோதியருண் மாமுனியும் தொல்காப் பியமொழிந்த தொன்முனியும் - மல்காச்சொற் 9 பாத்திரங்கொண் டேபதிபாற் பாய்பசுவைப் பன்னிரண்டு சூத்திரங்கொண் டேபிணித்த தூயோரும் - நேத்திரமாம் 10 தீதில் கவிதைத் திருமா ளிகைத்தேவர் ஆதி முனிவ ரனைவோரும் - சாதியுறும் 11 தந்திரத்தி னாலொழியாச் சார்வினையைச் சாற்றுதிரு மந்திரத்தி னாலொழித்த வல்லோரும் - செந்தமிழிற் 12 பொய்யடிமை யில்லாப் புலவரென்று நாவலர்சொல் மெய்யடிமைச் சங்கத்து மேலோரும் - ஐயடிகள் 13 காடவருஞ் செஞ்சொற் கழறிற் றறிவாரும் பாடவருந் தெய்வமொழிப் பாவலரும் - நாடவரும் 14 கல்லாதார் சிங்கமெனக் கல்விகேள் விக்குரியர் எல்லாரு நீயா யிருந்தமையால் - சொல்லாரும் 15 என்னடிக ளேயுனைக்கண் டேத்தினிடர் தீருமென்றுன் பொன்னடிக ளேபுகலாப் போற்றினேன் - பன்னியமென் 16 பஞ்சிபடா நூலே பலர்நெருடாப் பாவேகீண் டெஞ்சியழுக் கேறா வியற்கலையே - விஞ்சுநிறம் 17 தோயாத செந்தமிழே சொல்லே ருழவரகம் தீயாது சொல்விளையுஞ் செய்யுளே - வீயா 18 தொருகுலத்தும் வாரா துயிர்க்குயிராய் நின்றாய் வருகுலமோ ரைந்தாயும் வந்தாய் - இருநிலத்துப் 19 புண்ணியஞ்சே ருந்திப் புலத்தே வளிதரித்துக் கண்ணிய வாக்காங் கருப்பமாய் - நண்ணித் 20 தலைமிடறு மூக்குரத்திற் சார்ந்திதழ்நாத் தந்தம் உலைவிலா வண்ணத் துருவாய்த் - தலைதிரும்பி 21 ஏற்பமுதன் முப்பதெழுத் தாய்ச்சார் பிருநூற்று நாற்ப தெழுத்தா நனிபிறந்தாய் - மேற்படவே 22 எண்முதலா கப்பகரு மீரா றெனும்பருவம் மண்முதலோர் செய்து வளர்க்குநாட் - கண்மணிபோற் 23 பள்ளிக்கூ டத்தசையாம் பற்பலதொட் டிற்கிடத்தித் தள்ளிச் சிறார்கூடித் தாலாட்டி - உள்ளிலகு 24 மஞ்சட் குளிப்பாட்டி மையிட்டு முப்பாலும் மிஞ்சப் புகட்ட மிகவளர்ந்தாய் - மஞ்சரையே 25 பன்னியொரு பத்துப் பருவமிட்டு நீவளர்த்தாய் உன்னை வளர்த்துவிட வொண்ணுமோ - முன்னே 26 நினையும் படிப்பெல்லா நின்னைப் படிப்பார் உனையும் படிப்பிப்பா ருண்டோ - புனைதருநற் 27 செய்யுட்சொன்னான்குமுயர் செந்தமிழ்ச்சொல்லோர் நான்கும் மெய்யுட் பொருளேழ் விதத்திணையும் - மையிலெழுத் 28 தாதியாப் பெட்டு மலங்கார மேழைந்தும் பேதியாப் பேரெழின்மாப் பிள்ளையாய்ச் - சாதியிலே 29 ஆங்கமைசெப் பற்பண் ணகவற்பண் டுள்ளற்பண் தூங்கற்பண் பட்டத்துத் தோகையரா - ஓங்குமனத் 30 தெண்கருவி யைந்தீன் றிடுநூற்று மூன்றான பண்களும்பின் கல்யாணப் பாவையரா - எண்கொளும் 31 நற்றா ரகமா நவரசமாம் பிள்ளைகளைப் பெற்றாய் பெருவாழ்வு பெற்றாயே - உற்றகலாப் 32 பண்கள்முதற் பெண்களொடும் பாலரொடு நாடகமாம் பெண்கொலுவில் வீற்றிருக்கப் பெற்றாயே - மண்புகழ்த் 33 தாழ்விலா வட்டா தசவன் னனைகளெனும் வாழ்வெலாங் கண்டு மகிழ்ந்தாயே - ஆழ 34 நெடுங்கோல வையையிலென் னேசர்மேற் பட்ட கொடுங்கோல்செங் கோலாகக் கொண்டாய் -அடங்காத 35 எங்கோவே பத்தென் றியம்புதிசைக் குள்ளேநின் செங்கோல் செலாத திசையுண்டோ - இங்கேயுன் 36 தேசமைம்பத் தாறிற் திசைச்சொற் பதினேழும் மாசறநீ வைத்தகுறு மன்னியரோ - வீசு 37 குடகடலுங் கீழ்கடலுங் கோக்குமரி யாறும் வடவரையு மெல்லை வகுத்தாய் - இடையிருந்த 38 முன்னுறுந்தென் பாண்டி முதற்புனனா டீறான பன்னிரண்டு நாடுமப் பானாடோ - அந்நாட்டுள் 39 வையை கருவைமரு தாறுமரு வூர்நடுவே ஐயநீ வாழு மரண்மனையோ - செய்யபுகழ் 40 மூவேந்தர் வாகனமா மூவுலகும் போய்வளைந்த பாவேந்தேநீ பெரிய பார்வேந்தோ - காவேந்து 41 விண்ணவருங் காணரிய வேதா கமங்களெலாம் புண்ணியனே யுன்றன் புரோகிதரோ - எண்ணரிய 42 நல்லபெருங் காப்பியங்க ணாடகா லங்காரம் சொல்ல்லரசே யுன்னுடைய தோழரோ - தொல்லுலகிற் 43 சார்புரக்குங் கோவேநற் சாத்திரங்க ளெல்லாமுன் பார்புரக்குஞ் சேனா பதிகளோ - வீரரதிர் 44 போர்ப்பா ரதமும் புராணம் பதினெட்டும் சீர்ப்பாவே யுன்னுடைய சேனகளோ - பார்ப்பார்கள் 45 அக்கர வர்த்தியென லாமென்பார் பூலோக சக்கர வர்த்தியுநீ தானன்றோ - சக்கரமுன் 46 பேந்தி நெடுந்தேர்மே லேறிச் சுழிகுளம் நீந்தியோர் கூட நிறைசதுக்கம் - போந்து 47 மதுரங் கமழ்மாலை மாற்றணிந்து சூழும் சதுரங்க சேனை தயங்கச் - சதுராய் 48 முரசங் கறங்க முடிவேந்தர் சூழ வரசங்க மீதிருந்து வாழ்ந்தே - அருள்வடிவாய் 49 ஓங்குபுகழ் மூவ ரொருபா வொருப·தும் ஆங்கவைசொல் வாதவூ ராளிசொல்லும் - ஓங்குமவன் 50 கூற்றா யரனெழுதுங் கோவையுங் கோதிறாய் மாற்றா விரட்டைமணி மாலையும் - தேற்றமுறப் 51 பற்றா மிலக்கணநூற் பாவுநூற் பாவறிந்து கற்றார் வழங்குபஞ்ச காப்பியமும் - கொற்றவருக் 52 கெண்ணிய வன்னனைக ளீரொன் பதுமறியக் கண்ணிய மிக்கபெருங் காப்பியமும் - நன்ணியே 53 இன்புறு சேரனரங் கேற்றமகிழ்ந் தம்பலத்தான் அன்புறுபொன் வண்னத்தந் தாதியும்- முன்பவர்சொல் 54 மாத்தமிழா மும்மணி மாலையும் பட்டினத்தார் கோத்தணிந்த மும்மணிக் கோவையும் - மூத்தோர்கள் 55 பாடி யருள்பத்துப் பாட்டுமெட் டுத்துதொகையும் கேடில் பதினெட்டுக் கீழ்க்கணக்கும் - ஆடகமா 56 வெற்பனையார் மாதை விமலரிடத் தேயிருவர் கற்பனையாற் சொன்ன கலம்பகமும் - முற்படையோ 57 டாடற் கலிங்கமழித் தாயிர மானைகொன்ற பாடற் கரிய பரணியும் - கூடல் 58 நராதிபன் கூத்தனெதிர் நண்ணியோர் கண்ணிக் கொராயிரம்பொ னீந்த வுலாவும் - பராவுமவன் 59 பிள்ளைத் தமிழுமுன்னாம் பேராத பல்குரவர் வெள்ளத் தினுமிகுத்தோர் மெய்காப்ப - உள்ளத்து 60 வீரியஞ் செய்து வினையொழிய வேராச காரியஞ் செய்யுங் கவிதையே - பாரில் 61 அரியா சனமுனக்கே யான லுனக்குச் சரியாரு முண்டோ தமிழே - விரிவார் 62 திகழ்பா வொருநான்குஞ் செய்யுள்வரம் பாகப் புகழ்பா வினங்கண்மடைப் போக்கா - நிகழ்வே 63 நல்லேரி னாற்செய்யு ணாற்கரணத் தேர்பூட்டிச் சொல்லே ருழவர் தொகுத்தீண்டி - நல்லநெறி 64 நாலே விதையா நனிவிதைத்து நாற்பொருளும் மேலே பலன்பெறச்செய் விக்குநாள் - மேலோரிற் 65 பாத்தனதாக் கொண்டபிள்ளைப் பாண்டியன் வில்லியொட்டக் கூத்தனிவர் கல்ல்லாது கோட்டிகொளும் - சீத்தையரைக் 66 குட்டிச் செவியறுத்துக் கூட்டித் தலைகளெல்லாம் வெட்டிக் களைபறிக்க மேலாய்த்தூர் - கட்டி 67 வளர்ந்தனைபான் முந்திரிகை வாழைக் கனியாய்க் கிளர்ந்தகரும் பாய்நாளி கேரத் - திளங்கனியாய்த் 68 தித்திக்குந் தெள்ளமுதாய்த் தெள்ளமுதின் மேலான முத்திக் கனியேயென் முத்தமிழே - புத்திக்குள் 69 உண்ணப் படுந்தேனே யுன்னோ டுவந்துரைக்கும் விண்ணப்ப முண்டு விளம்பக்கேள் - மண்ணிற் 70 குறமென்று பள்ளென்று கொள்வார் கொடுப்பாய்க் குறவென்று மூன்றினத்து முண்டோ - திறமெல்லாம் 71 வந்தென்றுஞ் சிந்தா மணியா யிருந்தவுனைச் சிந்தென்று சொல்லியநாச் சிந்துமே - அந்தரமேல் 72 முற்றுணர்ந்த தேவர்களு முக்குணமே பெற்றார்நீ குற்றமிலாப் பத்துக் குணம்பெற்றாய் - மற்றொருவர் 73 ஆக்கிய வண்ணங்க ளைத்தின்மே லுண்டோநீ நோக்கிய வண்ணங்க ணூறுடையாய் - நாக்குலவும் 74 ஊனரச மாறல்லா லுண்டோ செவிகளுண வான நவரசமுண் டாயினாய் - ஏனோர்க் 75 கழியா வனப்பொன் றலததிக முண்டோ ஒழியா வனப்பெட் டுடையாய் - மொழிவேந்தர் 76 வாங்கு பொருள்கோள் வகைமூன்றே பெற்றார்நீ ஓங்குபொருள் கோள்வகையெட் டுள்ளாயே - பாங்குபெற 77 ஓர்முப்பா லன்றியைம்பா லுள்ளா யுனைப்போலச் சீர்முப்ப தும்படைத்த செல்வரார் - சேரமான் 78 தன்னடிக் கண்டு தளைவிடுத்தா யேழ்தளையுன் பொன்னடிக்குண் டென்பதென்ன புத்தியோ - என்னரசே 79 திண்பா வலர்க்கறிவாஞ் செந்தமிழாய் நின்றவுன்னை வெண்பாவென் றோதுவது மெய்தானோ -பண்பேர் 80 ஒலிப்பாவே சங்கத் துகமூன் றிருந்தாய் கலிப்பாவென் றோதல் கணக்கோ - உலப்பில் 81 இருட்பா மருண்மாற்றி யீடேற்று முன்னை மருட்பாவென் றோதல் வழக்கோ - தெருட்பாப் 82 பொருத்தமொரு பத்துப் பொருந்துமுனைத் தானே விருத்தமென்று சொல்லல் விதியோ - இருட்குவையை 83 முந்தியொளி யால்விலக்கு முச்சுடரென் பாருனைப்போல் வந்தென் மனத்திருளை மாற்றுமோ - சிந்தா 84 மணிகொடையின் மிக்கதென்பார் வண்கொடையு முன்பேர் அணியும் பெருமையினா லன்றோ - தணியும் 85 துலங்காரங் கண்டசரந் தோள்வளைமற் றெல்லாம் அலங்கார மேயுனைப்போ லாமோ - புலங்காணும் 86 உன்னைப் பொருளென் றுரைக்குந் தொறும்வளர்வாய் பொன்னைப் பொருளென்னப் போதுமோ - கன்னமிட்டு 87 மன்னர் கவர்ந்தும் வளர்பொருளே கைப்பொருள்கள் என்ன பொருளுனைப்போ லெய்தாவே - நன்னெறியின் 88 மண்ணிற் புகழுருவாய் வாழ்வதற்கும் வாழுநர் விண்ணிற்போய்த் தேவுருயாய் மேவுதற்கும் - எண்ணியுனைக் 89 கொண்டுபுகழ் கொண்டவர்க்கே கூடுமுனைக் கூடாத தொண்டருக்குத் தென்பாலே தோன்றுமால் - தண்டமிழே 90 ஈங்குனது சங்கத்தா லீச ருயர்ந்தாரோ ஓங்குமவ ரானீ யுயர்ந்தாயோ - பூங்கமல 91 வீடாளும் வாணியங்கை மேலே யிருந்தாயோ ஏடாக வுன்மே லிருந்தாளோ - ஆடரவத் 92 தாழ்பாய லாளரை நீதானே தொடர்ந்தாயோ சூழ்பாயோ டுன்னைத் தொடர்ந்தாரோ - வாழ்வேயென் 93 றோதிமுனி கேட்க வுனைமுருகர் சொன்னாரோ சோதி யவரைநீ சொற்றனையோ - பேதியா 94 நேசருனக் கேபொருளாய் நின்றாரோ நீண்மதுரை வாசருக்கு நீபொருளாய் வந்தாயோ - பாசமுறும் 95 என்செய்தி நீகண் டிரங்குவது நீதியல்லால் உன்செய்தி நானோ வுரைசெய்வேன் - இன்சொல்லாய் 96 கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க வதற்குத் தகவென்ற - சொற்குள்ளே 97 எல்லார்க்கும் புத்தி யியம்பிக் கரையேற்ற வல்லா யுனக்குரைக்க வல்லேனோ - சொல்லியவுன் 98 ஈரடிக்குள் ளேயுலக மெல்லா மடங்குமெனின் நேரடிக்கு வேறே நிலனுண்டோ - ஓரடிக்கோர் 99 ஆயிரம் பொன்னிறைக்கு மையரை வீதியிலே போயிரந்து தூதுசொல்லப் போக்கினோ - யாயிருந்தும் 100 மாண்பாயோர் தூதுசொல்லி வாவென்பே னென்வருத்தம் காண்பாயென் பெண்மதிநீ காணாதே - ஆண்பனைநற் 101 பெண்பனையா யாக்கினையாற் பெண்களிலே காரைக்கால் வண்பதியா ரெளவையென வந்துதித்தாய் - நண்பார் 102 திலகவதி யாருடனே சென்மித்தாய் மாடக் குலதவதி யானத்தார் கூடல் - பலதவஞ்சேர் 103 மேனியார் கண்டிகையும் வெண்ணீறுங் கண்டுருகும் மானியார் தேசிகனா வந்துதித்தாய் - ஞானியார் 104 துங்க மகவாகத் தோன்றி வனப்பகைக்கும் சிங்கடிக்குந் தாதையாய்ச் சீர்செய்தாய் - இங்குநீ 105 பெண்களெல்லாம் வாழப் பிறந்தமையா லென்மனத்திற் புண்களெல்லா மாறப் புரிகண்டாய் - ஒண்கமலத் 106 தன்னந் தனைவிடுப்பே னன்னந்தா னங்கவரை இன்னந்தான் கண்டறியா தென்பரே - மன்னெந்தாய் 107 அப்பாலோர் வண்டை யனுப்பி னவர்காமம் செப்பாதே யென்றாற் றிகைக்குமே - தப்பாது 108 மானைப்போய்த் தூதுசொல்லி வாவென்பேன் வல்லியப்பூந் தானைப் பரமர்பாற் சாராதே - ஏனைப்பூங் 109 கோகிலத்தை நான்விடுப்பேன் கோகிலமுங் காக்கையினம் ஆகி வலியானுக் கஞ்சுமே - ஆகையினால் 110 இந்தமனத் தைத்தூதா யேகென்பே னிம்மனமுமு அந்தமனோ தீதர்பா லண்டாதே - எந்தவிதம் 111 என்றென் றிரங்கினே னென்கவலை யெல்லாம்பொற் குன்றனையா யுன்னுடனே கூறுகேன் - சென்றாலும் 112 பண்ணிய பத்தொன் பதினா யிரத்திருநூற் றெண்ணியதொண் ணூற்றொன் றெனுந்தொடையாய் - நண்ணி 113 ஒருதொடை வாங்கி யுதவாயோ வோர்சே விருதுடை யார்க்குநீ வேறே - தருமிக்கே 114 ஓர்வாழ்க்கை வேண்டி யுயர்கிழிகொள் வான்கொங்கு தேர்வாழ்க்கை யென்றெடுத்த செய்தியும் - கீரன் 115 இசையா வகையி னியம்பினா னென்றே வசையாடித் தர்க்கித்த வாக்கும் - இசையான 116 பாட்டுக் கிரங்கியொரு பாணனுக்குச் சேரலன்மேற் சீட்டுக் கவிவிடுத்த சீராட்டும் - பாட்டியலில் 117 நாத்திரமான மேவுபொரு ணன்றா வறுபதெனும் சூத்திரமாப் பாடியரு டோற்றமும் - மாத்திரமோ 118 உன்னோ டவர்விளையாட் டொன்றோ வடமதுரைக் கந்நேர முன்பிறகே யார்வந்தார் - மன்னவன்மேற் 119 காரியார் நாரியார் கண்டகவி யைப்பகிர வாரியிலாக் கானகத்தில் வந்தவரார் - நாரினொடும் 120 போற்றியுறும் பத்திரற்காப் போந்து கிழவுருவில் தோற்றி விறகு சுமந்தவரார் - தேற்றியவற் 121 கீயரிய பொற்பலகை யிட்டவரார் மற்றவன்றன் நேயமனை விக்கெதிரா நேர்ந்தவளைப் - போயவையில் 122 தள்ளியிசை தாபிக்கத் தக்கவரார் தென்மதுரைக் குள்ளிருந்த சொக்கருனக் குள்ளன்றோ - எள்ளி 123 வடமொழியில் வேத வசனமே யீசர் திடமொழியா மென்பார் சிலரே - அடரும் 124 பரசமய கோளரியாய்ப் பாண்டிநா டெங்கும் அரசமய நீநிறுத்து மந்நாள் - விரசுநீ 125 ஆதிக்கண் வையையில்வே தாகமத்தைத் தாபித்தாய் சோதிக்கி னேடகமே சொல்லாதோ - வேதத்தே 126 வாதவனங் கண்டா தடைத்தகத வந்திறந்தாய் வேதவனங் கண்டால் விளம்பாதோ - வேதம் 127 அமிழ்தினுமிக் கென்னுமுனிக் கன்பருனைச் சொன்னார் தமிழ்முனியென் னும்பேர்தா ராதோ - தமிழால் 128 அறம்பொரு ளின்பம்வீ டாரணர்சொன் னாரத் திறம்பரமர் வாக்கேசெப் பாதோ - மறந்திடலில் 129 கற்பலகை யோதுமறை காணார்கீழ் நிற்கவுநீ பொற்பலகை மேலிருந்தாய் போதாதோ - தற்பரரோ 130 டெண்ணிரந்த வாசியழைத் திட்டாய் சதுர்வேதப் பண்ணிறைந்த வாசி பகராதோ - அண்ணலார் 131 தென்பா லுகந்தாடுஞ் செய்தியெல்லா முன்னிடத்தில் அன்பாலென் றப்பாலு மாரறியார் - உன்பேர் 132 பழியார் திசைச்சொல்லார் பன்னார் திருவாய் மொழியார் குழறி மொழிவார் - அழியா 133 உருவால வாயிருக்கு மோதரிய முத்தித் திருவால வாயிருக்குஞ் செல்வர் - ஒருமால் 134 வடமதுரை யேறுமுன்னே வந்தவடி வென்னத் தடமதுரை மீனுயர்த்த தாணு - படர்தீர்க்கும் 135 சத்திபுரத் தோர்பாற் றழைத்துமகிழ்ந் தோர்சீவன் முத்திபுரத் தோர்பான் முளைதெழுந்தோர் - அத்திசைபோல் 136 ஆங்கோ ரிருநான் கயிரா வதஞ்சுமக்கும் பூங்கோயிற் குள்ளுறைந்த புண்ணியனார் - பாங்காம் 137 இடம்பவன மீதாக விந்திரன்வந் தேத்தும் கடம்பவன மீதிலுறை காந்த - அடும்பேர் 138 அலகம் பரிக்கு மரியார் முடிவேய்ந் துலகம் பரிக்குமுறை யுள்ளார் - பலநாளும் 139 நின்றவூர்ப் பூசலார் நீரடிவெ லாநினைந்து குன்றுபோ லேசமைத்த கோயிலும் - நன்றிதரும் 140 தாயான கங்கைமுடி தான்குளிரக் கண்ணப்பர் வாயா லுமிழ்ந்ததிரு மஞ்சனமும் - தூயமழைத் 141 துன்பார் திருக்குறிப்புத் தொண்டர் துணித்துறையில் வன்பா யளித்தபரி வட்டமும் - இன்பாத் 142 தணிவரிய மானக்கஞ் சாறணார் சாத்தும் மணிமுடிசூழ் பஞ்ச வடியும் - அணிவிடையார் 143 காமன்பான் முன்சேந்த கண்போல மூர்த்தியார் தாமன்பான் முன்சேர்த்த சந்தனமும் - பூமன்போற் 144 காக்கு மரிபுனைந்த கண்மலருங் காதலொடு சாக்கியர்தாஞ் சாத்தியபூந் தண்மலரும் - போக்கியமா 145 ஆக்கிய மாற னமுதுஞ் சிறுத்தொண்டர் மார்க்கறியுஞ் தாயர்தரு மாவடுவும் - நீக்கரிய 146 காரா ரிரவிற் கணம்புல்லர் தம்முடிமேற் சீராக வேற்றியசெந் தீபமும் - ஆரால் 147 அமைத்து வணங்கலுறு மங்கணர்க்குப் பூசை சமைத்து வணங்கத் தகுமோ - உமைக்கன்பர் 148 அற்சனைபாட் டேயாமென் றாரூரர்க் காதியிலே சொற்றமிழ் பாடுகெனச் சொன்னமையாற் - சொற்படியே 149 செய்தநால் வேதந் திகைத்தொதுங்கப் பித்தனென்று வைதாய்நீ வைதாலும் வாழ்த்தாமே - மெய்தான் 150 இருந்தமிழே யுன்னா லிருந்தே னிமையோர் விருந்தமிழ்த மென்றாலும் வேண்டேன் - வருந்தினன்மால் 151 வெல்லானை தின்ற விளங்கனியா னேன்விரகக் கல்லானை தின்ற கரும்பானேன் - நல்லவரைத் 152 தேடுநிழற் சிந்தனையிற் றேம்பினேன் வெம்பனியால் வாடிய செந்தா மரையொத்தேன் - ஓடமிசைக் 153 கொள்ளம்பூ தூர்வெள்ளக் கொள்ளைகடந் தாயென்மால் வெள்ளங் கடத்திவிட வேண்டாவோ - தள்ளென்று 154 மாறிட்ட சாக்கியரை வன்கழுவே றச்செய்தாய் சீறிட்ட வேளையது செய்யாயோ - நீறிட்டே 155 அங்கரும்பின் கூனொழித்தா யன்றுவழு திக்குமதன் செங்கரும்பின் கூனொழியச் செய்யாயோ - அங்கமுறு 156 வெப்புநோய் தீர்க்காயவ் வேந்தனுக்கென் வெவ்விரக வெப்புநோய் தீர்க்க விரும்பாயோ - தப்பலவே 157 சாக்கிய ரிட்டநஞ்சு தன்னையமு தாக்கினையின் றாக்கிய நஞ்சையமு தாக்காயோ - நீக்கரிய 158 வெந்தீக்குள் ளேகிடந்தும் வேவாயென் பார்காமச் செந்தீச் சுடாதிருக்கச் செய்யாயோ - வந்து கொங்கில் 159 அப்பனியால் வாடாதே யார்க்குந் துயரொழித்தாய் இப்பனியால் வாடா திரங்காயோ - அப்பரை 160 மைக்கடல்கொல் லாதபடி வன்கன் மிதப்பித்தாய் அக்கடல்கொல் லாமலுற வாக்காயோ - மிக்குயர்ந்த 161 மன்றிற் பனைவடிவ மாற்றினா யப்பனைமேல் அண்றிற்புள் வேறொருபுள் ளாக்காயோ - தொன்றுதொட்டுத் 162 தென்பொதியிற் சாந்தினொடு தென்றலுற வாய்வந்தாய் அன்புறவென் னோடுமுற வாக்காயோ - முன்பிருந்து 163 பாடுமிசை யெல்லாமுன் பாவையராச் சேர்ந்தாயென் னோடுமுனி யாதிருக்க வோதாயோ - பாடலாற் 164 சின்னமொடு காளஞ் சிவிகைபந்தர் முத்தடைந்தாய் பொன்னே சுடாதணியப் பூட்டாயோ - முன்னிறந்தாள் 165 அங்கத்தைப் பூம்பாவை யாக்கினா யாதலினென் அங்கத்தைப் பூம்பாவை யாக்காயோ - மங்கத்தான் 166 மாய்ந்தாலு மாமுதலை வாய்ப்பிள்ளை யைப்படைத்தாய் மாய்ந்தாலும் பின்படைக்க வல்லையே - ஏய்ந்தவுரை 167 செய்தாளென் றென்சொல் செவியோர்ந்து செல்வாயிங் கெய்தாம லங்கிருக்க வெண்ணாதே - பொய்தீரத் 168 தேசிவருஞ் சொக்கருக்கே சென்றிருந் தாங்கவரைப் பேசிவருந் தூது பிறிதுண்டோ - நேசமொடு 169 தைவரினுங் காட்டத் தகதாரைத் தாதையர்க்குக் கைவிரலாற் காட்டியருள் காளையும் - தெய்வவெள்ளிப் 170 புதர வானவரைப் போற்றமுயன் றையாற்றில் ஆதரவாய்க் கன்ட வரசரும்- நாதர் 171 அளந்தருள்செம் பொன்னைமணி யாற்றிலிட் டாரூர்க் குளந்தனிலே தேடியருள் கோவும் - வளந்திகழும் 172 காளத்தி யில்வந்த காட்சிகயி லாயத்து நீளத்தான் சொற்றவனு நீயன்றோ - கேளப்பால் 173 அம்மைதமக் கில்லாதா ரம்மைதா மாவிருந்தார் அம்மையென்று முன்னுரைத்த வம்மையாய்த் - தம்மெதிரே 174 வெள்ளானை மேற்கொண்ட வேந்தர் வரவிடுத்த வெள்ளானை மேற்கொன்ட வித்தகராய்த் - தள்ளாது 175 விஞ்சுவரால் வண்ணனை வெண்ணீற்ற ரென்றுபணிந் தஞ்சலிசெய் தாட்செய்த வன்பராய்ச் - சஞ்சரியாத் 176 தென்கையி லாயவரைச் செல்வர்பாற் சென்றாயே உன்கையி லாகாத தொன்றுண்டோ - என்கையால் 177 ஆயு மவள்பாகத் தன்பரு முக்கிரராம் சேயும் புரந்திருக்குந் தென்மதுரை - வாயினிய 178 செவ்வழியே செல்வாய்நீ செல்வழியி னல்வழிதான் எவ்வழி யென்றா லியம்பக்கேள் - எவ்வழியும் 179 வெல்வா யுனைநினைந்து வேயுறு தோளியென்று செல்வார்தங் காரியஞ்சித் திக்குமே - செல்வாய் 180 தடையுண்டோ வையாறு தன்னிலே பொன்னி இடைவிலங்கச் சென்றதறி யேனோ - இடையிலே 181 பாலைநில நெய்தலாப் பண்ணினா யின்னுமதைச் சோலைநில மாக்குவைநான் சொல்லுவதென் - மேலானார் 182 கூறும் பொதிசோறு கொண்டு வரினுனக்கு வேறும் பொதிசோறு வேண்டுமோ - வீறாகக் 183 கற்பார் பொருள்காணார் காசுபணங் காணிலுனை விற்பா ரவர்பானீ மேவாதே - கற்றாரை 184 எள்ளிடுவார் சொற்பொருள்கேட் டின்புறார் நாய்போலச் சள்ளிடுவார் தம்மருகே சாராதே - தெள்ளுதமிழ்ப் 185 பாயிரமுன் சொன்ன படிபடியா மற்குழறி ஆயிரமுஞ் சொல்வார்பா லண்டாதே - ஆய்தருநூல் 186 ஓதி யறியாத வொண்பே தையருடனே நீதி முறையா நிகழ்த்துநூல் - பேதமையாம் 187 காணாதாற் காட்டுவான் றான்காணான் கண்ணெதிரே நாணா திராதே நவிலாதே - வீணாக 188 ஆற்றி னளவறிந்து கல்லா தவையஞ்சும் கூற்றினர்பா லேகாதே கூடாதே - போற்றாரை 189 வேண்டாதே கேடில் விழுச்செல்வங் கல்வியென்று பூண்டாய்நீ தானே பொருளன்றோ - ஆண்ட 190 வலவா நலவா வடுதுறையி லுன்போல் உலவாக் கிழிபெற்றா ருண்டோ - நலவிருப்ப 191 தாக்கவரு செங்கலைப்பொன் னாக்கினாய் மண்முழுதும் மாக்கனக மாக்கிவிட வல்லையே - நோக்குபுகார் 192 பாடியதோர் வஞ்சிநெடும் பாட்டாற் பதினாறு கோடிபொன் கொண்டதுநின் கொற்றமே - தேடியருள் 193 நல்லார்கட் பட்ட வறுமையி னின்னாதே கல்லார்கட் பட்டதிருக்க் கண்டாயே - கல்லார்பால் 194 ஏகாதே யன்பிலா ரிந்திரன்போல் வாழ்ந்தாலும் போகாதே யங்கே புசியாதே - மாகவிஞர் 195 தாமின் புறுவ துலகின் புறக்கண்டு காமுறுவர் கற்றரிந் தாரென்னும் - மாமகிமை 196 சேர்ந்ததுன்பா லன்றோ திருப்பாற் கடலமுதம் ஆர்ந்தவர்க்கல் லாதுபசி யாறுமோ - சேர்ந்துன்னை 197 நம்பாதார் வீதி நணுகாதே நல்லார்கள் தம்பா லிருந்து தரித்தேகி - வம்பாகப் 198 பின்போ யமனோடப் பேர்ந்தோடும் வையையிலே முன்போ யெதிர்போய் முழுகியே - அன்போடே 199 தாழ்ந்து நீள்சத்தந் தனைக்கற்றா ருள்ளம்போல் ஆழ்ந்த வகழி யகன்றுபோய்ச் - சூழ்ந்துலகில் 200 மேன்மே லுயர்ந்தோங்கு வேதம்போன் மேலாக வான்மே லுயர்ந்த மதில்கடந்து - போனால் 201 மிருதிபுரா ணங்கலைபோல் வேறுவே றாக வருதிரு வீதிசூழ் வந்தே - இருவினையை 202 மோதுஞ் சிவாகமம்போன் முத்திக்கு வித்தாக ஓதுந் திருக்கோயி லுட்புகுந்து - நீதென்பால் 203 முன்னே வணங்கி முறையினபி டேகமுனி தன்னேயம் போலாந் தளவிசையும் - தன்னடைந்து 204 தேறும் படிவர் சிவலோகஞ் சேர்ந்திருக்க ஏறும் படிநிறுத்து மேணிபோல் - வீறுயர்ந்த 205 கோமேவு கோபுரமுங் கூடலின்மேன் முன்னொருநான் மாமேகஞ் சேர்ந்ததுபோன் மண்டபமும் - பூமேவும் 206 மட்டளையும் வண்டெனப்போய் மாளிகைப் பத்தியறைக் கட்டளையுங் கண்டு களிகூர்ந்தே - இட்டமணிச் 207 சிங்கா தனத்திற் சிறந்ததிரு வோலக்கம் எங்கா கிலுமொருவர்க் கெய்துமோ - பைங்கழல்சூழ் 208 தேங்கமலத் தேசு தெரிசனஞ் செய்தவர்க்கே பூங்கமலக் கண்கொடுத்த புத்தேளும் -ஓங்கமல 209 மையி லடியில் வணங்காத் தலையொன்றைக் கையி லளித்த கடவுளும் - மொய்யிழந்த 210 மானந் தனக்கு வகுந்தகடம் பாடவிக்கு மானந் தனைவகுத்த வானவனும்- தேனங் 211 கணிமலர்த்தா ணெஞ்சூ டழுத்தியழுத் தாதே மணிமுடிக ணீக்கி வணங்கக் - கணநாதர் 212 ஓதுதுனி யோடுசின முற்றபகை செற்றமுரட் போத முனிவர் புடைசூழத் - தீதில் 213 அரிய திசப்ப்பால ரத்தமுத றாங்கித் தெரிசனக்கண் பார்த்தேவல் செய்யப் - பரவியே 214 முன்னிருவ ரெண்மரொடு மொய்த்த பதினொருவர் பன்னிருவர் நின்று பணிசெய்ய - முன்னே 215 நதிக ளெனக்கண்டு நந்திபிரம் போங்க உதவவிரு பாலி னொதுங்கிப் - பதினெண் 216 குலத்தேவர் தம்மகுட கோடிபதி னெட்டு நிலத்தோர் முடியா னெரிய - நிலத்தே 217 செருக்குஞ் சினேகமுற்ற தேவி யுடனே இருக்குஞ் சினகரத்து ளெய்திப் - பொருக்கெனப்போய் 218 என்தாயென் றேத்து மிடைக்காடன் பின்போன செந்தா மரைபோற் றிருந்தாளும் - வந்துமனம் 219 தேறிக் கழுத்தரியத் தென்பாண்டி நாடனுக்கு மாறித் திரும்பு மணிக்குறங்கும் - சீறிப் 220 பணிக்கற்கு மாறாப் படையுடைவாள் சேர்த்து மணிக்கச் சுடுத்த மருங்கும் - துணிக்கமையத் 221 தொண்டுபடு வந்தி சொரிந்திடும்பிட்ட டள்ளியள்ளி உண்டுபசி தீர்த்த வுதரமும் -அண்டுமொரு 222 தாய்முலைப்பா லுண்டறியாத் தாம்பன்றிக் குட்டிகளின் வாய்முலைப்பா லூட்டியபூண் மார்பமும் - தூயமுடி 223 ஆணிக் கனகத் தழுத்த வழுதிக்கு மாணிக்கம் விற்ற மலர்க்கையும் -காணிக்காப் 224 பூம்படலை யாத்திப் புனைமலரைப் பூணாமல் வேம்பலரைப் பூண்ட வியன்புயமும் - ஓம்புகொடி 225 வாதிற் கரிக்குருவி வாழ்தற் குபதேசம் காதிற் புகன்ற கனிவாயும் - தீதில்சொல் 226 வாயிலா நீயிருந்து வாழும் படியுனக்குக் கோயிலாத் தந்த குழைக்காதும் - போய்வணிகப் 227 பெண்ணீராள் கண்ணீர் பெருகத் தழுவித்தம் கண்ணீரா லாற்றியருள் கண்களும் - தெண்ணீரார் 228 பண்சுமந்த பாட்டினுக்கும் பாவைதந்த பிட்டினுக்கும் மண்சுமந்த சோதி மணிமுடியும் - கண்சுமந்து 229 கண்டுகளி கூர்ந்து கசிந்துகசிந் துள்ளுருகித் தொண்டுசெய்து தாண்முடிமேற் சூடியே - மண்டும் 230 உடுக்கலந்தங் கோக்குலமென் றுற்றறிந்தா லென்ன அடுக்கிலங்கு தீபமெதி ராகக் - கடுத்திடேல் 231 வெங்கதிருண் டுன்குலத்து வெண்மதியுண் டென்னல்போல் தங்கவா ரத்தீபந் தாமசையத் - துங்கவிடை 232 ஏங்குமொரு மீனுயர்த்தி னெங்கிருப்பே னென்பதுபோல் ஆங்கிட தீபமழன்றாட - நீங்கா 233 தருடா ம்ருகத்துரு வானார்க் குவந்தே புருடா ம்ருகத்தீபம் போற்ற - மருவார் 234 வருகுலத்தார் பானு வரனடுக்குற் றென்ன அருகுலவுந் தட்ட தசைய - இருசுடர்க்கும் 235 சொக்கருணைத் தானே சுடரென்று காட்டுதல்போல் அக்கரா லத்தியொளி யாய்விளங்கத் - தக்கவனோ 236 டெற்கும் பயந்தொளித்தா ரென்றுகங்கை தேடுதல்போற் பொற்கும்ப தீபமெதிர் போய்வளையச் - சொற்குருகும் 237 அற்பூரத் தொண்டர்க் கருண்முத்தி யீதெனல்போற் கற்பூரத் தட்டிற் கனல்வாய்ப்பப் - பொற்பாக 238 நங்குலத்தும் வந்துதித்தார் நாதரென்று பானுமகிழ்ந் தங்குறல்போற் கண்ணாடி யங்கணுற - இங்கரசர் 239 எங்குலத்தா ராயினா ரென்றுபிறை தோற்றுதல்போல் துங்கமுடி மேற்குடைவெண் சோதிவிடப் - பொங்கியெழும் 240 முந்துகடல் வெண்டிரைகண் முன்னேமா மிக்காக வந்தவன்போல் வெண்சா மரையிரட்ட - விந்தைசெயும் 241 ஆடரவச் சித்தரிவ ராதலினா லாலவட்டம் நீடரவம் போலவெதிர் நின்றாட - நாடகலா 242 வாலநறுந் தென்றனம் மன்னரென்று காண்பதுபோற் கோல விசிறி குளிர்ந்தணுகக் - காலைத் 243 திருவனந்தன் முன்னாகச் சேவிக்குங் காலத் துருவனந்த தேவ ருடனே - மருவியெதிர் 244 போற்றுவாய் நீயும் புரோகிதரை முன்னனுப்பித் தோற்றரவு செய்து துதித்தற்பின் - ஆற்றல் 245 அரிய சிவாகமத்தோ ராதிசைவர் தம்பால் உரிய படையா வொதுங்கி - அருமையுடன் 246 மூவர் கவியே முதலாங் கவியைந்தும் மூவராய் நின்றார்தம் முன்னோதி - ஓவாதே 247 சீபாத மெண்ணாத தீயவினைப் பாவிசெய்த மாபாத கந்தீர்த்த மாமருந்தைத் - தீபமணிப் 248 பைந்நாகஞ் சூழ்மதுரைப் பாண்டியனே பாரமணிக் கைந்நாகஞ் சூழ்கோயிற் கண்மணியே - மன்னாக 249 மைக்கட் கரும்பை மருவிப் பிரியாத முக்கட் கனியே முழுமுதலே - மிக்கபுனற் 250 கங்கா நதிகக்கிறையே கன்னித் துறைக்கரசே சிங்கா தனத்துரையே செல்வமே - எங்கோவே 251 நாடவினை யாடிவந்த நற்பாவை போலடியார் கூடவிளை யாடிவந்த கோமானே -தேடரிய 252 சிந்தைமகிழ்ந் தன்புடையார் தேடியநா ளோடியெதிர் வந்தவிளை யாட்டினிமேல் வாராதோ - வந்தருளால் 253 பாவும் புகழ்சேர் பழிக்கஞ்சி யென்றுலகில் மேவும் பெயரினிமேல் வேண்டாமோ - ஆவலினால் 254 புக்குவந்தர் தம்மேற் பொடிபோட் டுளமயக்கிற் சொக்கலிங்க மென்றெவருஞ் சொல்லாரோ - இக்கணைத்த 255 அங்கைவே டானே யரசளா வுஞ்சிறிய மங்கைதனைக் கோட்டிகொளல் வல்லமையோ - கங்கையெலாம் 256 நல்லமைக்கண் ணூடுவர நல்குதியே னங்களையெல்லாம் வல்லசித்த ரென்றழைக்க மாட்டாளே - நல்லவர்போல் 257 மைக்குவளைக் கண்ணி வளைகவர்ந்து மங்கையர்தம் கைக்குவளை விற்கக் கனக்குண்டோ - திக்குவளை 258 தோட்டாரும் வேம்பாய்த் தொடர்ந்துதொடர்ந் தேயொருதார் கேட்டாரும் வேம்பாகக் கேட்டோமே - நாட்டமுற 259 வேளையெரித் தாய்க்கியல்போ மின்னார் கலைகவர்தல் காளை யிடையிருந்து கற்றதோ - மீளாது 260 சென்றிலகு நாரையன்று சென்றசிவ லோகத்தே இன்றெனையங் கெய்தவிட லாகாதோ - அன்றியழற் 261 குன்றே விருத்த குமார ரிளம்பாலர் என்றேயோர் பெண்வீட் டிருக்கலாம் - சென்றொருநாள் 262 பொன்னனையாள் வீடும் புகுந்திருக்க லாமெனினென் பொன்னையாள் வீடும் பொருந்தாதோ - என்னுமொழி 263 எல்லாந் திருச்செவியி லேறும் படியுரைக்க வல்லாயுன் போலெவர்க்கு வாய்க்குமே - நல்லான் 264 கருணைவிழி யாளங் கயற்கண்ணி தன்னோ டருள்புரிய வாழ்ந்திருங்கு மையர் - திருமதுரை 265 தானே சிவராச தானியென்று வீற்றிருந்தால் தேனேநம் பாக்கியத்தின் செய்தியே - ஆனமையால் 266 அந்தரலோ கத்தின்மே லானதிரு வாலவாய்ச் சுந்தர மீனவனின் சொற்படியே - வந்து 267 துறவாதே சேர்ந்து சுகாநந்த நல்க மறவாதே தூதுசொல்லி வா. 268